லடாக்கில் 2 பனிமலைச் சிகரங்களின் உயரம் கணக்கெடுப்பு

0 1838

லடாக் பகுதியில் இதுவரை கணக்கிடப்படாமல் இருந்த இரண்டு பனி மலைச்சிகரங்களின் உயரம் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள 2 பெயரிடப்படாத சிகரங்களின் உயரத்தை கணக்கிடும் பணிகளை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் லடாக் போலீசார் இணைந்து மேற்கொண்டனர்.

4 பெண் மலையேற்ற வீராங்கனைகள் உள்பட 20 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

முதல் மலைச்சிகரத்தின் உயரத்தை 20,505 அடி என கணக்கிட்ட அவர்கள் அதற்கு 2018ம் ஆண்டு மலையேற்றத்தின் போது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தலைமை காவலர் நோர்பு வாங்டு-வின் பெயரை சூட்டினர். மற்றொரு மலைச்சிகரத்தின் உயரம் 20,010 அடி என கணக்கிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments