ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் திருப்பதி சென்றது

0 1355

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருமலையில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 2 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 5ஆம் நாள் விழாவில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளும் மலையப்பசுவாமிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாற்றுவது வழக்கம். இதற்காக பல வகையான மலர்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள், இலையால் செய்யப்பட்ட கிளிகள், பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதிக்கு தனி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments