சிறுவர்களுக்குப் போட்டியாக ஸ்கேட் போர்டு சாகசங்கள் செய்யும் முதியவர்

0 1542

ஜப்பானைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஸ்கேட் போர்டில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி வருகிறார். கினோஷிடா என்னும் அந்த முதியவர் 2 ஆண்டுகளுக்கு முன் ஸ்கேட் போர்டை ஒன்றை வாங்கினார்.

ஆரம்பத்தில் ஸ்கேட் போர்டில் நிற்கவே தடுமாறிய கினோஷிடா அதனை பயன்படுத்தும் வழிமுறைகளை சிறுவர்களிடம் இருந்து கற்றறிந்தார். தொடர் பயிற்சியின் மூலம் அதே சிறுவர்களுக்கு போட்டியாக பார்கில் பல்வேறு சாகசங்களை அவர் நிகழ்த்தி வருகிறார்.

ஸ்கேட் போர்டில் புது புது நுணுக்கங்களை கற்று கொள்ள தீவிர பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தனது மூளை சுறுசுறுப்பாக இயங்குவதாகத் தெரிவித்த கினோஷிடா  இதனால் முதியவர்களைத் தாக்கும் டிமென்ஷியா போன்ற மறதிநோய் தன்னை தாக்காமல் உள்ளதாகப் பெருமிதம் கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments