முதலமைச்சர் பாதுகாப்பிற்காக செல்லும் கன்வாய் வாகனங்களின் எண்ணிக்கை, 12-ல் இருந்து 8ஆகக் குறைப்பு..!

0 3505

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனத்துடன் பாதுகாப்புக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 8ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 முதலமைச்சரின் பயணத்தின்போது, 8 கான்வய் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கூடுதல் காவல் ஆணையர், போக்குவரத்து கூடுதல் ஆணையர் உள்ளிட்டோரின் 4 வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் பயணிக்கும்.

இந்த வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் கான்வாய் வாகனங்களுடன் செல்லும் கூடுதல் வாகனங்கள் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலமைச்சரின் வாகனத்துடன் இனி 8 கான்வய் வாகனங்கள் மட்டுமே செல்லும் என்றும் பொதுமக்களின் வாகனத்தை தடுக்காமல், முதலமைச்சரின் வாகனத்தோடு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments