குழந்தைகளை கவனிக்காமல் கோவில், ஆசிரமம் என சுற்றியதால் ஆத்திரம்.. மனைவியை கட்டையால் தாக்கிக் கொன்ற கணவர் போலீசில் சரண்

0 2153

சென்னை ஆவடி அருகே குழந்தைகளை சரிவர கவனிக்காமல் ஆசிரமம், கோவில் என சுற்றிவருவதாகக் கூறி கோபத்தில் மனைவியை கட்டையால் தாக்கிக் கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார்.

திருநின்றவூரைச் சேர்ந்த செல்வி அடிக்கடி கோவில், ஆசிரமம் என சென்றுவிடுவது வழக்கம் என்று கூறப்படும் நிலையில், அதற்கு கணவர் சந்திரமோகன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

நேற்று வழக்கம்போல் விழுப்புரம் அருகேயுள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்று வந்த செல்விக்கும் சந்திரமோகனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கட்டை ஒன்றை எடுத்து சந்திரமோகன் தாக்கியதில் தலையில் காயமடைந்த செல்வி, வீட்டின் அருகே உள்ள குபேர ஈஸ்வரர் கோவிலுக்கு சென்று படுத்துள்ளார்.

கோவிலிலேயே மயங்கி விழுந்த செல்வியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments