கண்டெய்னர் லாரி விபத்துகளை மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1490

கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாதந்தோறும் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 சக்கர கண்டெய்னர் லாரியில் 13.5 டன் பாரமும், 12 சக்கர கண்டெய்னர் லாரியில் 41 டன் பாரமும் ஏற்ற வேண்டும் என விதிமுறை உள்ளது. இருந்த போதும், கண்டெய்னர் லாரிகளில் அனுமதிக்கபட்டதை விட அதிக எடை ஏற்றி செல்லப்படுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, விபத்துகளைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments