மது அருந்திவிட்டு வருவதை தட்டிக்கேட்ட மனைவி... சிலிண்டரால் அடித்து கொலை செய்த கணவன்

0 4086

திருச்சி எடமலைப்பட்டி புதூரில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை தட்டிக்கேட்ட மனைவியை, சிலிண்டரால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.   

ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்த கோபால்  மதுபோதையில் வீட்டிற்கு வந்த போது, இதுபோன்று குடித்துவிட்டு வந்தால் உன்னை விட்டு விட்டு வேறொருடன் சென்றுவிடுவேன் என மனைவி அனிதா கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோபால் காலி சிலிண்டரை எடுத்து தாக்கியதில் அனிதா படுகாயம் அடைந்த நிலையில், சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அனிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனார். ஆனால் சிகிச்சை பலனின்றி அனிதா இன்று காலை உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments