போதைப் பொருள் பயன்படுத்தியதை ஆர்யன் கான் ஒப்புக் கொண்டார் - என்சிபி..!

0 4329

கஞ்சாவில் தயார் செய்யப்படும் சரஸ் எனும் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஒப்புக் கொண்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சொகுசு கப்பலில் நடைபெற்ற ரெய்டைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணையின் போது ஆர்யன் கானின் நண்பர் அர்பாஸ் மெர்சன்ட்டிடம் இருந்து ஆறு கிராம் அளவில் சரஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆர்யன் கானிடம் விசாரித்த போது அர்பாஸ் மெர்சன்டிடம் இருந்து சரஸ் போதைப் பொருளை வாங்கி தான் பயன்படுத்தியதாகவும், கப்பலில் வைத்து மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறியதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments