மதுபோதையில் டீக்கடையில் தகராறு செய்தவர் மீது வெந்நீரை ஊற்றிய டீ மாஸ்டர்..!

0 7487

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மதுபோதையில் டீக்கடையில் தகராறு செய்தவர் மீது டீ மாஸ்டர் வெந்நீரை ஊற்றிய நிலையில், இருதரப்பை சேர்ந்தவர்களும் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

செங்கிப்பட்டி சாலையில் உள்ள டீக்கடைக்கு மதுபோதையில் டீ குடிக்க சென்ற மனுநீதி என்பவர், டீயில் ஈ விழுந்ததாக கூறி டீ மாஸ்டர் கார்த்திகுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அத்திரமடைந்த கார்த்திக் வெந்நீரை எடுத்து மனுநீதியின் மீது ஊற்றியதாக சொல்லப்படுகிறது

. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி இருதரப்பினருக்கும் கந்தர்வக்கோட்டை காவல்நிலையம் முன்பு திரண்ட நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments