காலில் விழுந்து கதறினாலும் விடவில்லையே..! மன்மத சூப்பர்வைசருக்கு லாட்ஜில் நடந்த செப்பல் ட்ரீட்மென்ட்..!

0 4177

திருப்பதியில் பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்து, லாட்ஜுக்கு அழைத்த சூப்பர்வைசரை, சம்மந்தப்பட்ட பெண் செருப்பால் துவைத்தெடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிகளை தூய்மை செய்யும் பணிகளை தனியார் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்கும் சூப்பர்வைசர் குணசேகர், பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தினமும் பணி அளிக்க வேண்டும் என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் ஊழியர் ஒருவருக்கு ஃபோன் செய்து திருச்சானூர் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து வைத்துள்ளதாக கூறி அழைத்துள்ளார். அந்த பெண்ணும் ஒப்புக் கொண்டது போல பேசி, திருப்பதியில் உள்ள மகளிர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

அவர்கள் கூறியபடி, திருச்சானூரில் உள்ள லாட்ஜ் அறைக்கு சென்ற பெண்ணிடம் குணசேகர் அத்துமீற முயன்றபோது, மகளிர் சங்க நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன் பிறகுதான் செப்பல் ட்ரீட்மென்ட் ஆரம்பமானது.

இன்ப அதிர்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்த மன்மதனுக்கு துன்ப அதிர்ச்சி ஏற்பட்டதால், வேறு வழியின்றி சம்மந்தப்பட்ட பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அதன் பிறகும் ஆத்திரம் தாளாமல் அந்த பெண் செருப்பால் அடித்து துவைத்தார். பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைஅளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை பாடமாக இருக்க வேண்டும் என்று கூறிய மகளிர் சங்க நிர்வாகிகள், பின்னர் போலீசாரை வரவழைத்து அந்த மன்மதனை ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments