லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்ததாக வழக்கு.. மத்திய அமைச்சர் மகன் விசாரணைக்கு ஆஜர்

0 2092

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் காரால் விவசாயிகள் மீது மோதி கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை லக்கிம்பூரில் விசாயிகள் நடத்திய போராட்டத்திற்குள் நுழைந்த கார் மோதியும், அதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையிலும் எட்டு பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது மோதிய கார் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவுக்கு சொந்தமானது என்றும் காரில் அவரது மகன் ஆஷிஷ் இருந்தாகவும் புகார் எழுந்தது.

இதனை அடுத்து ஆஷிஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். ஆஷிசை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் அவர் போலீசார் முன்பு ஆஜராகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments