ஆந்திராவில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு நெருக்கடி உருவாகும் அபாயம் - அவசர உதவி கோரி ஆந்திர முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம்..!

0 1618

ஆந்திராவில் மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்களுக்கே தாங்கும் என்பதால், அவசர உதவி கோரி அம்மாநில முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில் 45 சதவீதத்தை வழங்கும், ஆந்திர மின்னுற்பத்தி கழகத்தின் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்களுக்கே வரும் என்றும், பற்றாக்குறை காரணமாக மின்னுற்பத்தி நிலையங்கள் 50 சதவீத திறனில் மட்டுமே இயங்குவதாகவும் கூறியுள்ளார்.

மின்பற்றாக்குறையை ஈடுகட்ட பெருமளவில் வெளிச்சந்தையை சார்ந்திருப்பதாகவும், விலை யூனிட் 4 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையில் இருந்து 15 ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் ஆந்திர முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க ஆந்திர அனல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு, போதிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments