டெக்சாசில் கருக்கலைப்புக்கான தடை தற்காலிகமாக தொடரும்..!

0 1643

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கான தடை தற்காலிகமாக தொடரும் என மேல்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் கருத்தரித்து 6 வாரங்கள் நிரம்பிய பெண்கள் கருக்கலைப்பு செய்ய தடை விதித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு தடை விதித்தது.

இதற்கு எதிராக டெக்சாஸ் மாகாணம் செய்த முறையீட்டை விசாரித்த நியு ஆர்லியன்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் கருக்கலைப்பு தடை சட்டத்தை தற்காலிகமாக செயல்படுத்த அனுமதி அளித்தது.

இதனை அடுத்து டெக்சாசில் மறுபடியும் கருக்கலைப்பு சட்டவிரோதமாகியுள்ளது. இதனால் கருவில் உள்ள குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்கிற காரணத்தை தவிர வேறு காரணத்திற்காக அங்கு பெண்கள் கருக்கலைப்பு செய்ய இயலாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments