WHO அங்கீகரித்துள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அமெரிக்காவிற்குள் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி

0 2351

WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அமெரிக்காவிற்குள் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த, முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அமெரிக்கா வர விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக கடந்த செப்டம்பர் 20ந் தேதி அந்நாடு அறிவித்தது. ஆனால் எந்த கொரோனா தடுப்பூசி ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற விவரம் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக குழு மற்றும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள ஆறு கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்ட வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் பயணக்கட்டுபாடு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments