மதுரையில் குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு... தீவிபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு

0 3859

மதுரை ஆனையூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதி, ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூரில் எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடன்சி பகுதியில், சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும்  இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு 2 பிள்ளைகளும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் தூங்கியுள்ளனர்.

நள்ளிரவில் மாடி அறையில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு புகை உருவானதாகவும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. அறையில் தீப்பற்றி எரிய தொடங்கி நிலையில் மயக்க நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரும் அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு படையினர், தீயை அணைத்து இருவரது உடலையும் மீட்டனர்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவன்-மனைவியை காவு கொண்ட இந்த தீ விபத்து குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஏசியில் தீப்பிடித்தது எப்படி?, பராமரிப்பின்றி இருந்த ஏசியா? மின்கசிவு ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், விசாரணைக்குப் பிறகே இதுகுறித்து முழுமையாக தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments