லக்கிம்புர் வன்முறை - போலீஸ் விசாரணைக்கு இன்று அசிஷ் மிஸ்ரா ஆஜராகிறார்..!

0 2124

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் வன்முறை தொர்பான வழக்கு விசாரணைக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அசிஷ் மிஸ்ரா இன்றுகாலை 11 மணிக்கு ஆஜராக உள்ளார் . லக்கிம்புர் விவசாயிகள் போராட்டத்தின் போது காரை மோதவிட்டு 4 விவசாயிகள் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக அசிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் இல்லாததால் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து நேற்றிரவு லக்கிம்புரில் உள்ள தமது வீட்டுக்கு அசிஷ்  தமது தந்தை அஜய் மிஸ்ராவுடன் வந்து சேர்ந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments