8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுவன், சிறுமி மீட்பு..!

0 2590

மதுரை ரயில் நிலையம் அருகில் தொலைந்து போன தன் தம்பி மற்றும் தங்கையை 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சகோதரன் கண்டுபிடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருச்சியை சேர்ந்த சண்முகம், பார்வதி தம்பதி கடந்த 2013-ஆம் ஆண்டு மதுரை வந்தபோது தனது 6 வயது மகள் மற்றும் 2 வயது மகனை தவறவிட்டதாக கூறப்படுகிறது.

சாலையில் தவித்த பெண் மற்றும் ஆண் குழந்தையை மீட்ட ரயில்வே போலீசார் காப்பகத்தில் சேர்த்ததாகவும், பெற்றோர் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில் சிறுமியை திண்டுக்கல், காந்தி கிராமம் அடுத்துள்ள காப்பகத்திலும், 2வயது சிறுவனை மதுரை காப்பகத்திலும் குழந்தைகள் நல அமைப்பினர் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.

8 ஆண்டுகளுக்கு பின் உறவினர் மூலம் கிடைத்த தகவலில் தங்கை மற்றும் தம்பியை, குழந்தைகள் நல அமைப்பினரின் உதவியுடன் சகோதரர் குமார் மீட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments