9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு...!

0 2012

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 12 ஆயிரத்து 341 பதவிகளுக்கு 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு
முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. 14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் இன்று 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக வாக்குப்பதிவுக்காக 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.

ஒவ்வொரு வாக்காளரும் கிராம ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு என 4 வாக்குகளை அளிப்பார்கள்.

இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments