ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி

0 2113
மும்பை அருகே சொகுசு கப்பலில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில், கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பை அருகே சொகுசு கப்பலில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில், கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

போதை விருந்து நடத்தியது தொடர்பாக ஆர்யன் கான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆர்யன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது மும்பை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

ஆர்யன் கானுக்கு ஜாமீன் தந்தால், வெளியே அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வாதிட்டனர்.

மேலும், ஆர்யன் கானிடம் இருந்து போதைப் பொருட்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments