புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்

0 1681
புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளுக்கு நவம்பர் 2 தேதியும், இரண்டாம் கட்டமாக  5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு நவம்பர் 7 ம் தேதியும்,  3ம் கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு நவம்பர் 13ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 11 ம் தேதி தொடங்கி அக்டோபர் 22 ஆம் தேதி நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments