விருதுநகர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில், குடிநீர் வசதி இல்லாமல் குட்டை நீரைப் பருகுவதாக மாணவர்கள் வேதனை

0 3971
விருதுநகர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை மேம்படுத்தித் தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை மேம்படுத்தித் தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைக்குளம் அரசுப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர், இங்கு முறையான குடிநீர் வசதி இல்லை என்றும் அதன் காரணமாக அருகில் கால்நடைகள் தண்ணீர் அருந்தும் குட்டையிலுள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் கூறும் மாணவர்கள், கழிப்பறைகள் இருந்தும் அவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments