உரிய அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வி.ஜே. மருத்துவமனைக்கு சீல்; மருத்துவமனையை விட்டு பிரிய முடியாமல் கதறி அழுத செவிலியர்கள்

0 2947

நெல்லையில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பெருமாள்புரத்தில் இயங்கி வந்த விஜே மருத்துவமனை கட்டடம் அரசிடம் அனுமதி வாங்காமல் கட்டப்பட்டிருப்பதாகவும், வணிக கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெற்று விட்டு விதிமீறி மருத்துவமனை கட்டிடம் கட்டியுள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு பூட்டி சீல் வைப்பதோடு, கட்டிடத்தை இடிக்கும் படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் சிலர் கதறி அழுதனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments