சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களை கண்காணிக்கும் பணியில் களமிறக்கப்பட்ட ரோபோக்கள்

0 1945

சிங்கப்பூரில் பொது இடங்களில் கூடும் மக்களை கண்காணிக்கும் பணியில் Xavier என பெயரிடப்பட்ட ரோபோ ஈடுபட்டுள்ளது.

சிங்கப்பூரின் Home Team Science and Technology அமைப்பால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவில் 7 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் வீதிகளில் வலம் வரும் ரோபோக்கள் விதியை மீறி பார்க்கிங் செய்பவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஒன்று கூடுபவர்கள் , ஒன்று கூடி புகைபிடிப்பவர்களுக்கு விதியை சரியாக கடைபிடிக்குமாறு எச்சரிக்கை ஒலி எழுப்பும்.

விதி மீறலில் ஈடுபடும் மக்களை எச்சரிக்கவே இவை பயன்படுத்தப்படுவதாகவும் சட்டத்தை அமல்படுத்த பயன்படுத்தப்படுவதில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments