9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு..

0 1676
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது.  அதில் 77.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2-ம் கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், 5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி 9 மாவட்டங்களில் வாக்குப் பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments