சிசிடிவி கேமரா வெச்சா நாங்க எப்படி திருடுறது.. கேமராவை அரிவாளால் உடைக்க முயன்ற போது கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்ததால் கலகலப்பு..

0 5364
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய கும்பல், சிசிடிவி கேமரா பொறுத்திய வீட்டின் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய கும்பல், சிசிடிவி கேமரா பொறுத்திய வீட்டின் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தேனூர் கிராமத்தில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, அம்சவள்ளி என்பவர் தனது வீட்டில் 3 சிசிடிவி கேமராக்களை பொறுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு கும்பல் மதுபோதையில் அம்சவள்ளி வீட்டின் முன்பு வந்து அரிவாளை காட்டி அம்சவள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

அரிவாளால் சிசிடிவி கேமராவை உடைக்க முயன்ற மர்ம நபர் ஒருவர் அங்குள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்தார்.

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments