வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை கள்ளச்சாவி போட்டு திருடி சென்ற 3 மர்ம நபர்கள்

0 1655

நாமக்கல்லில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை 3 மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கந்து முத்துசாமி தெருவை சேர்ந்த மனோஜ் வழக்கம் போல் தனது பல்சர் வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். இந்நிலையில், அந்த வழியாக நடந்து வந்த 3 மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்றனர்.

இந்த காட்சிகள் அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இதன் அடிப்படையில் போலீசார் 3 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments