லக்கிம்பூர் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்யவில்லை..? உச்சநீதிமன்றம் வினா

0 1936
லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்யவில்லை என உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது.

லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்யவில்லை என உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு வெள்ளிக்கிழமை 11 மணிக்கு ஆஜராக உள்ளதாகவும், ஆஜராகாவிட்டால் சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அனுப்பியதைப் போல சம்மன் அனுப்பியிருக்கலாமே, ஏன் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மரணம், துப்பாக்கிச் சூடு என்கிற கடுமையான குற்றச்சாட்டுக்கள் இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்து விசாரிக்காதது ஏன் என்றும் நீதிபதிகள் வினவினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments