தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

0 2043

தென் மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 10ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 10 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments