விழாக்காலத்தையொட்டி மும்பை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகம்..!

0 1767

மும்பை விமான நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசைகளில் நின்ற பலர் தாங்கள் செல்ல வேண்டிய விமானங்களைப் பிடிக்க முடியாமல் தவறவிட்டனர்.

நவராத்திரி விழாவையொட்டி மும்பை விமான நிலையத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பயணிகள் கூட்டமாகக் குவிந்தனர். முன்கூட்டியே வராமல் கடைசி நேரத்தில் வந்த பயணிகள் பாதுகாப்புச் சோதனைகளுக்காக வரிசையில் காத்து நிற்க வேண்டியதாகிவிட்டது.

இதனால் பலர் தாங்கள் செல்ல வேண்டிய விமானங்களைப் பிடிக்க முடியவில்லை. இதேநிலை நாட்டின் மற்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்புக்கே எல்லாவற்றைவிடவும் முன்னுரிமை என்பதால் பாதுகாப்புச் சோதனையில் எந்தச் சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments