ராஜேந்திர பாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் - உயர்நீதிமன்றம்..!

0 3366

அதிமுக மாவட்டச் செயலாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் 24-ஆம் தேதி சாத்தூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், ராஜேந்திரபாலாஜி தன்னை தாக்கியதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளரின் புகாரில், ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. விசாரணையின்போது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments