விமானப்படை நாள் கொண்டாட்டம்... விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசம்..!

0 2063

இந்திய விமானப்படை நாளையொட்டிக் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசங்கள் நடைபெற்றன. 

1932ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் நாள் இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் அக்டோபர் எட்டாம் நாள் விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். 

விமானப்படையினர் நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களிலும் தங்கள் மனிதநேய உணர்வின் மூலமும் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 


இந்திய விமானப்படையின் 89ஆண்டு தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் விழா நடைபெற்றது.

இதில் முப்படை அலுவலர்களின் தலைவர் பிபின் ராவத், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், விமானப்படையினரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் விமானத்தில் இருந்து குதித்த வீரர்கள் பாராசூட் உதவியுடன் தரையிறங்கி சாகசம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments