தென்சீனக் கடலில், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மீது மோதிய மர்மப் பொருள்

0 1939

தென்சீனக் கடலின் அடியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மர்மப் பொருள் மீது மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச விதிகளுக்கு மாறாக, தென்சீனக் கடல் பரப்பில் உள்ள சிறுதீவுகள் உள்ளிட்டவற்றிற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில், அங்கு பன்னாட்டு கடல் எல்லைப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், USS Connecticut எனப்படும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், கடலடியில் 5 நாட்களுக்கு முன்னர் மர்மப்பொருள் மீது மோதியுள்ளது.

இந்த மோதலால் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்கள் உயிருக்கோ, நீர்மூழ்கியின் இயக்கத்திற்கோ பாதிப்பு இல்லை என அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.  மோதியது மற்றொரு நீர்மூழ்கியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் மூழ்கிய கப்பல் அல்லது கண்டெய்னராக இருக்கலாம் என அமெரிக்க கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மோதலினால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக, இரு மாலுமிகளுக்கு மிதமான காயமும், 9 பேருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments