ஆசிரியர்களை சுட்டுக்கொல்லும் முன் ஐடி கார்டை சோதித்த தீவிரவாதிகள்..!

0 2698

ஜம்மு காஷ்மீரில் நேற்று ஆசிரியர்களின் அடையாள அட்டையை சோதித்து பார்த்துவிட்டு அவர்களில் சீக்கியரையும், காஷ்மீரி பண்டிதரையும் மட்டும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீநகரில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள், தலைமை ஆசிரியர் அறைக்குள் இருந்த ஆசிரியர்களின் அடையாள அட்டையை காண்பிக்க வற்புறுத்தி உள்ளனர்.

இதனை அடுத்து மதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை பிரித்து சீக்கியரான சுபீந்தரையும், காஷ்மீரி பண்டிதரான தீபக்கையும் பள்ளிக் கட்டடத்திற்கு வெளியே கொண்டுவந்து பலமுறை தீவிரவாதிகள் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் காஷ்மீரி பண்டிதரான மருந்துக் கடை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments