தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் 500 பேர் மீது வழக்குப்பதிவு

0 2286

வார இறுதி நாட்களிலும் கோவில்களை திறக்கக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை தலைமையில், நேற்று சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பு  பாஜகவினர் சுமார் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ்  வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments