வடக்கு, வட மேற்கு சீனாவில் கன மழை... 200 மி.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளதாக தகவல்

0 1656

வடக்கு மற்றும் வட மேற்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஷான்ஜி, கான்சூ உள்ளிட்ட மாகாணங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ள நிலையில் ஃபென்ஹே நதியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் வாழும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கனமழையால் 2 ஆயிரத்து 800 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்கதாக கூறப்படும் பிங்யோ நகரத்தில் உள்ள பழமையான சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments