சென்னையில் 101 ரூபாயைத் தாண்டியது ஒருலிட்டர் பெட்ரோல் விலை

0 2832

பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து நான்காம் நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதால் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை 35 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாயாகவும், டீசல் விலை 96 ரூபாயாகவும் உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 109 ரூபாய் 54 காசுகளாகவும், டீசல் விலை 99 ரூபாய் 92 காசுகளாகவும் உள்ளது.

பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலியம் விலை உயர்ந்துள்ளதே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 87 சென்ட்கள் உயர்ந்து 81 டாலர் 95 சென்ட்களாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments