தருமபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் பெண் சிசு கண்டெடுப்பு

0 2177

தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் பெண் சிசு கண்டெடுக்கப்பட்டது.

அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வாகனம் நிறுத்துமிடத்தில் பிறந்து 3 நாளேயான பச்சிளம் சிசு இருப்பதைக் கண்ட ஒருவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்பு இந்த பச்சிளம் குழந்தை அரூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற நபர்கள் அதன் தொட்டிலில் குழந்தைக்கு தேவையான மாற்றுத் துணிகள், பால் பவுடர், பால் புட்டி, டானிக் உள்ளிட்டவைகள் வைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments