தெலங்கானா- ஆந்திர அரசுகளுக்கு தமிழக அரசு கடிதம்..!

0 1593

கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கும்படி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைத் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ஈஞ்சம்பள்ளி முதல் தமிழ்நாட்டின் கல்லணை வரை கோதாவரி - கிருஷ்ணா - வடபெண்ணை - பாலாறு - தென்பெண்ணை - காவிரி ஆறுகளை இணைப்பதற்குத் தேசிய நீர் மேம்பாட்டு முகமை விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இந்தத் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆந்திர, தெலங்கானா மாநிலங்களுக்குத் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி கோதாவரி ஆற்றில் இருந்து தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 247 டிஎம்சி நீர் தெற்கு நோக்கித் திருப்பி விடப்படும்.

இதன்மூலம் தமிழகத்துக்கு 83 டிஎம்சி நீர் கிடைக்கும். ஆறுகள் இணைப்புக் கால்வாய் காவிரியில் இணையுமிடத்தைக் கல்லணைக்குப் பதிலாக மாயனூருக்கு மாற்ற வேண்டும் என்றும், இதனால் இந்த நீரை வைகை, குண்டாறு ஆகியவற்றுக்கும் கொண்டு செல்ல முடியும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments