ஹெல்மெட் போடாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.200 அபராதம்... குறுஞ்செய்தியால் குழம்பிய ஆட்டோ ஓட்டுநர்

0 2464

கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு  மதுரை போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக அபராதம் விதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 கும்பகோணம் மேட்டுதெருவை சேர்ந்த குருநாதன் என்பவர் கடந்த 20 ஆண்டாக அப்பகுதியில்  ஆட்டோ ஓட்டி வருகிறார்.  இந்நிலையில் கடந்த 5ந்தேதி இரவு 7 மணி அளவில் அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில்  மதுரை ஒத்தக்கடை பகுதியில் சென்றதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை எனவும், ஹெல்மெட் போடவில்லை எனவும் தெரிவித்த போக்குவரத்து போலீசார் 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குருநாதன் கும்பகோணம் போக்குவரத்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments