மதுரை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் தங்கம் கடத்தல்

0 5687

மதுரை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் வயிற்றிற்குள் மறைத்து கடத்தி கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை விமான நிலையத்திற்கு நேற்று காலை 9.20 மணி அளவில் துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் 156 பயணிகள் வந்தனர்.  விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது 2பேர் அயன் பட பாணியில் வயிற்றின் பெருங்குடல் பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அஜித்குமாரிடம்  981 கிராம் தங்கமும், பாலமுருக குமாரிடமிருந்து 220 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments