9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்... 2ம் கட்ட பிரச்சாரம் நிறைவு..!

0 2671

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட  பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் 9 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் நேற்று மாலை 5 மணியுடன் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments