ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கட்டடங்கள் தரைமட்டம்

0 2421

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தலைநகர் டோக்கியோ மற்றும் சைடாமா பகுதிகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

ஆனாலும் கட்டடங்கள் விழுந்து நொறுங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து பல்வேறு இடங்களில் ரயில்களும், புல்லட் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments