லக்கிம்பூர் வழக்கு தொடர்பான விசாரணை - அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு..!

0 1198

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் எட்டு பேர் உயிரிழக்க காரணமான வன்முறை சம்பவம் தொடர்பாக, யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த விசாரணை அறிக்கையை உ.பி., அரசு இன்று தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.


லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை கொண்டு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மோதியதாகக் கூறப்படுகிறது.அங்கு நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப் பட்டனர்.

இதையடுத்து இந்த வன்முறை சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments