வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 15ந் தேதி முதல் விசா! மத்திய அரசு அனுமதி

0 1790

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் 15 ஆம் தேதிமுதல் விசா வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதால் விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான விமானங்களில் இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு 15ம் தேதி முதல் விசா அனுமதிக்கப்படும்.

பிற விமானங்கள் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் 15ந் தேதி முதல் விசா அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments