மாமூல் கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் கைதான ரவுடி ..! ஜாமீனில் வெளியே வந்து கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்..!

0 8067
ஜாமீனில் வெளியே வந்து கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்..!

புதுச்சேரியில், மாமூல் கேட்டு தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு ஜாமினில் வெளியில் வந்த ரவுடிகள், கடையின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 5-ம் தேதி தியாக முதலியார் வீதியில் உள்ள பாத்திர கடைக்கு சென்ற ஸ்டிக்கர் மணி உள்ளிட்ட 4 பேர் மாமூல் கேட்ட நிலையில், உரிமையாளர் ராஜ்குமார் மாமூல் வழங்காததால் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ரவுடிகள் ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கடை உரிமையாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments