விபத்தில் பலியான குட்டி குரங்கிற்காக கண்ணீர் போராட்டம்.. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!

0 2573

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை அடிவாரத்தில் சாலை விபத்தில் பலியான குட்டிக்குரங்கை விட்டு பிரிய மனமில்லாமல் முத்தமிட்டு வேதனையை வெளிப்படுத்திய சக குரங்குகளின் பாசப் போராட்டம் அங்கிருந்தவர்களை கலங்கவைத்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 

அருகே தாணிப்பாறை சதுரகிரி மலை அடிவாரப் பகுதியில் பக்தர்கள் வீசிச்செல்லும் உணவுப்பொருட்களை உண்பதற்காக ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிவது வழக்கம்.

சம்பவத்தன்று தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் சாலையில் ஓடி விளையாடிய குட்டி குரங்கு ஒன்றை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதைக்கண்ட பிற குரங்குகள் இறந்த குட்டி குரங்கின் அருகில் வந்து குரங்கை தொட்டு பார்த்தும், முகந்து பார்த்தும் உயிருடன் உள்ளதா? என கண்ணீர் சிந்தி பாசப் போராட்டம் நடத்தின.

தகவல் ஆறிந்து அங்கு வந்த வனத்துறையினர் குரங்கை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

மலை மற்றும் வனப்பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் வாகனங்களில் இருந்த படியே குரங்குகளுக்கு உணவு அளித்து பழக்கிவிட்டு விடுகின்றனர். அந்த வாடிக்கையில் ஏதாவது உணவு கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் குரங்குகள் சாலையை நோக்கி வந்து விடுகின்றன.

அப்படி சாலையில் குரங்குகள் இருந்தால் சற்று கவனத்துடன் வாகனங்களை இயக்குங்கள், உயிரும் உறவும் மனிதர்களுக்கு மட்டுமல்ல குரங்குகளை போன்ற மற்ற விலங்குகளுக்கும் முக்கியம் என்று சுட்டிக்காட்டுகின்றனர் வனவியல் ஆர்வலர்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments