சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி

0 2059

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால், அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பம்பை நதியில் பக்தர்கள் நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இணையதளத்தில் பதிவு செய்யும் முறை தொடரும் என அறிவித்துள்ள கேரள அரசு, 2 டோஸ் தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிலக்கல் வரை மட்டுமே பக்தர்கள் வாகனங்களில் செல்ல அனுமதி என்றும், அதன்பின் கேரள அரசு பேருந்து அவர்களை பம்பையில் இறக்கிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments