கரடிகளுக்காக நடைபெற்ற மீன் சாப்பிடும் போட்டி ; 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது Otis என்ற கரடி

0 1544
கரடிகளுக்காக நடைபெற்ற மீன் சாப்பிடும் போட்டி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடைபெற்ற கரடிகளுக்கான மீன் சாப்பிடும் போட்டியில் Otis என்ற கரடி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கட்மை  தேசிய பூங்காவில் உள்ள கரடிகள் புரூக்ஸ் ஆற்றில் வளரும் கிழங்கான் மீன்களை பிடித்து உண்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகும் வீடியோக்களின் அடிப்படையில் வன விலங்கு பிரியர்களால் சிறப்பாக மீன்களை வேட்டையாடி உண்ணும் கரடி தேர்வு செய்யப்படுகிறது. 12 கரடிகள் பங்கேற்ற போட்டியில் Otis என்ற 25 வயது கரடி அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றது.

இந்தக் கரடியின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிதி திரட்டும் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டு கரடிகளை பாதுகாக்கும் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments