மோசடி நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் ; கோவை தீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

0 3790
கோவை தீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோவை மாவட்ட காவல் துறையில், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கோவை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த அவர், மோசடி நிதி நிறுவனங்கள் மீது அளிக்கப்படும் புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்ததாகவும், அதன் பின்னர் வழக்குகளை பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments