வாகனம் மோதி சாலையில் உயிரிழந்து கிடந்த குரங்கு-தட்டி எழுப்பி பாசப்போராட்டம் நடத்திய மற்ற குரங்குகள்

0 1947

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் உயிரிழந்து கிடந்த குரங்கை, மற்ற குரங்குகள் தட்டி எழுப்பி பாசப் போராட்டம் நடத்தின.

தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு ஒன்று சாலையில் உயிரிழந்து கிடந்தது. அப்போது அங்கு வந்த மற்ற குரங்குகள், உயிரிழந்த குரங்கை தொட்டுப் பார்த்தும், தட்டி எழுப்பியும் பாசப்போராட்டம் நடத்தின.

தகவலறிந்து வந்த வனத்துறை ஊழியர் உயிரிழந்து கிடந்த குரங்கை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments